You are here

கட்டுரைகள்

மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தல்

மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும், விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத, சட்ட அரசியல் வடிவங்கள் உடைய உரிமைகள் ஆகும்.  இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் ஆகும்.  வாழும் உரிமை, சுதந்திரம், சித்திரவதைக்கு உட்படா உரிமை, சட்டத்தின் முன் சமநிலை, அரசில் பங்களிக்க உரிமை, தன்னாட்சி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம், கூடல் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், சொத்து உரிமை, கல்வி உரிமை, உணவுக்கான உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, தேசியதுக்கான உரிமை உட்பட்ட மனித உரிமைகள் மனிதர்களுக்கு உரித்தான உரிமைகள் ஆகும்.  இந்த உரிமைகள் மனிதன் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகும்.

தமிழ் விக்கிப்பீடியா: தமிழால் இணைவோம், அறிவால் வெல்வோம்

ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கு அறிவு ஒர் அடிப்படைக் கருவி. அச் சமூகத்தின் மொழியில் தகவல்களும் அறிவும் பகிரப்படும்பொழுது அம் மொழி சார்ந்த சமூகம் வலுப் பெறுகிறது.  தமிழ் விக்கிப்பீடியா உலகளாவிய தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான அறிவை கூட்டாக உருவாக்கிப் பகிர்வதற்கான செயற்திட்டம் ஆகும்.

கல்வி 2.0 - கற்றல் கற்பித்தலில் இணைய நுட்பங்கள்

உலகில் உணவு, பொருட்கள், மருத்துவம் ஆகிய அனைத்தையும் விட கல்வியே மிக வேகமாக விலை உயர்ந்துவருகிறது.[1]  பெரும் நேரத்தையும் பணத்தையும் செலவழித்து பட்டப்படிப்பைப் பெற்றாலும் அக்கல்வியை முழுமையாகப் பயன்படுத்தும் தொழில்கள் பெரும்பான்மையினருக்கு கிட்டுவதில்லை.[2]  அதே வேளை புதிய அறிவுகளும் திறன்களும் தேவைப்படும் தொழில்வாய்ப்புக

கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளிகள்

காற்று, நீர், உணவு போன்றே மனிதருக்கு அடிப்படையானது தகவல். எது உணவு, எது நஞ்சு என்று அறிவதில் இருந்து மருந்து, மரபகராதி, தொழில்நுட்பம், அரசு என்று அனைத்து தளங்களுக்கும் அடிப்படையானது அறிவு. இன்றைய அறிவுச் சமூகத்தின் பொருளாதார மூலம் அறிவு ஆகும். எவ்வாறு நிலம் நிலவுடமைச் சமூகத்தின் பொருளாதார மூலமாக அமைந்ததோ, அதே போலவே தகவல் அல்லது அறிவு இன்றைய பொருளாதாரத்தின் மூலமாக அமைகிறது. யார் அறிவையும், அதன் கட்டமைப்புக்களையும் உருவாக்குகிறார்களோ கட்டுப்படுத்துகிறார்களோ அவர்களே பொருளாதாரத்தையும், மனித சமூகத்தின் பொது நலத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெறுகிறார்கள்.

Theme by Danetsoft and Danang Probo Sayekti inspired by Maksimer