மனித உரிமைகள் மனிதர்கள் அனைவருக்கும் இயல்பாக இருக்கும், விட்டுக் கொடுக்க முடியாத, மறுக்க முடியாத, சட்ட அரசியல் வடிவங்கள் உடைய உரிமைகள் ஆகும். இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் அடிப்படை உரிமைகள் ஆகும். வாழும் உரிமை, சுதந்திரம், சித்திரவதைக்கு உட்படா உரிமை, சட்டத்தின் முன் சமநிலை, அரசில் பங்களிக்க உரிமை, தன்னாட்சி, கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், சிந்தனைச் சுதந்திரம், சமயச் சுதந்திரம், கூடல் சுதந்திரம், நகர்வுச் சுதந்திரம், சொத்து உரிமை, கல்வி உரிமை, உணவுக்கான உரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, தேசியதுக்கான உரிமை உட்பட்ட மனித உரிமைகள் மனிதர்களுக்கு உரித்தான உரிமைகள் ஆகும். இந்த உரிமைகள் மனிதன் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியான உரிமைகளாகும்.